Categories
Uncategorized நீலகிரி மாவட்ட செய்திகள்

புலிக்கு விஷம் கொடுத்து கொன்ற 2 பேர் கைது – மேலும் இருவருக்கு வலைவீச்சு …!!

நீலகிரி மாவட்டம் உதகை அருகே புலிக்கு இறைச்சியில் விஷம் வைத்து கொன்ற நிகழ்வில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

உதகை அருகே முதுமலை புலிகள் சரணாலயம் பகுதிக்குட்பட்ட மசனகுடி வனப்பகுதியில், கடந்த டிசம்பர் மாதம் 20ஆம் நாள் புலி ஒன்று இறந்து கிடந்தது. அதை கண்ட வனத்துறையினர் உடலை கைப்பற்றி ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைத்தனர். ஆய்வின் முடிவில் புலிக்கு விஷம் கொடுத்துக் கொன்றது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மசனகுடி பகுதியை சேர்ந்த அகமது கபீர் மற்றும் கரியன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்தபோது , புலிக்கு விஷயம் கொடுத்து கொன்றதை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து இருவரையும் கைது செய்து, தலைமறைவான மசனகுடியை சேர்ந்த சதம் , சவுக்கத் அலி ஆகிய இருவரையும் வலைவீசி தேடிவருகின்றனர்.

Categories

Tech |