Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கொரோனாவின் 2 வது அலை வீச்சு…. இரவு நேர ஊரடங்கு அமல்…. மதியமே அனுப்பி வைக்கப்பட்ட காய்கறிகள்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு காரணமாக காய்கறிகளை வியாபாரிகள் மதியமே வெளியூர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரமங்கலம், குளமங்கலம், பணங்குளம், மேற்பனைக்காடு கொத்தமங்கலம் மற்றும் சேந்தன்குடி ஆகிய கிராமங்களிலிருந்து பழங்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தப் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பழங்கள் மற்றும் காய்கறிகள் அனைத்தும் குளமங்கலம், மரமடக்கி, கீரமங்கலம் மற்றும் கொத்தமங்கலம் ஆகிய ஊர்களில் உள்ள கடைகள் மற்றும் மார்கெட் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் வெளியூர்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படும். இந்த கடைகளுக்கு பழங்கள் மற்றும் காய்கறிகள் எப்பொழுதும் இரவு நேரத்தில் தான் அனுப்பி வைக்கப்படும். ஆனால் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்ததால் மதியமே காய்கறிகளை லாரிகளில் ஏற்றி வியாபாரிகள் அனுப்பி வைத்துள்ளனர்.

Categories

Tech |