Categories
தேசிய செய்திகள்

18 வயது மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள… மத்திய அரசு அனுமதி…!!

 கொரோனா பரவல் காரணமாக 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கப்பட்டு வந்த நிலையில், 18 வயது மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

உலக நாடு முழுவதும் கொரோனா நோய் பரவல் காரணமாக இந்தியாவில் தற்போது 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் 45 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கப்படுவது போன்று இவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடும் திட்டம் அறிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக அந்தந்த மாநில அரசுகள்  முடிவு எடுத்துக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனவே பல மாநில அரசுகள் குறைந்த விலையில் மருந்துகளை கொள்முதல் செய்து இலவசமாக பொதுமக்களுக்கு வழங்க முயற்சி செய்து வருகின்றன.உத்திரப் பிரதேசம் அசாம் தங்கள் மாநிலங்களைச் சேர்ந்த 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று தெரிவித்துள்ளன. இதைப் போலவே பல மாநிலங்களும் அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படுமா? என்பது சந்தேகத்திற்கு உரிய ஒன்றாகும். தற்போது தேர்தல் நடந்து நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் இது தொடர்பாக மாநில அரசு முடிவு எடுப்பதில் பல சிக்கல்கள் உள்ளன. எனவே புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு வந்த பிறகுதான் முடிவு எடுக்கும் நிலை உள்ளது. மே 2-ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை எண்ண  பட்டு அன்றே யார் ஆட்சி அமைக்கிறார்கள் என்று தெரியப்படுத்துவார்கள்.

அதன்பின் புதிய ஆட்சி அமைந்த பிறகு இதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிப்புகள் வரலாம். ஒருவேளை தேர்தல் கமிஷன் அனுமதித்தால் முன்கூட்டியே முடிவு எடுப்பதற்கு வாய்ப்பு உண்டு. அசாம் மாநிலத்திலும் தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கின்றது. ஆனாலும் அந்த மாநிலத்தில் இலவச தடுப்பூசி திட்டத்தை அறிவித்திருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |