தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமீப காலமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக நீலகிரியின் 4 தாலுகாகளில் உள்ள பள்ளிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளதால் மக்கள் வேறு இடங்களுக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வங்கக்கடலில் 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று பலமாக வீசக் கூடும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.