மீனம் ராசி அன்பர்களே..!
இன்று சந்தோச சிந்தனைகள் மனதை உற்சாகப்படுத்தும்.
சிறு செயல்களையும் நேர்த்தியுடன் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும். தியானம் போன்றவற்றில் ஈடுபடுங்கள். எதிர்பார்த்த நிதியுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அமைதியாக பணிகளை மேற்கொள்வீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். குடும்பத்திலிருந்த பிரச்சனைகளும் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த சங்கடங்களும் சரியாகும். இன்று அன்பு வெளிப்படும் நாளாக இருக்கும். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். கேட்ட இடத்தில் பணஉதவிகள் கிடைக்கும். சந்தோஷமான தருணங்களை அனுபவிப்பீர்கள். காதலில் உள்ளவர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். திருமணத்திற்கு நல்ல வரன்கள் வரக்கூடிய வாய்ப்பு இருக்கும். சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள். செயலில் வேகம் கூடும். விவேகத்துடன் எதிலும் ஈடுபடுவீர்கள். உற்றார் உறவினர்களின் வருகை இருக்கும். வரவு அதிகரிக்கும். மாணவர்களுக்கு வெற்றிகள் வந்துச்சேரும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணியவேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே குருபகவான் வழிபாட்டையும் சித்தர்கள் வழிபாட்டையும் மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் பச்சை நிறம்.