Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் போட்டிகளில் ,மலிங்காவின் சாதனையை முறியடித்து …! அமித் மிஸ்ரா பிடிக்க உள்ளார் …!!!

ஐபிஎல் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய, வீரர்களின் பட்டியலில் அமித் மிஸ்ரா இரண்டாவது  இடத்தில்  உள்ளார்.

நேற்று நடைபெற்ற மும்பைக்கு எதிரான போட்டியில் ,டெல்லி அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமித் மிஸ்ரா இருந்தார். இவர் ஓவரின் வீசிய பந்துகளில் 24 ரன்களை விட்டுக்கொடுத்து ,4 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதுவரை நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் 38 வயதான அமித் மிஸ்ரா 164 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதனால் அதிக விக்கெட்டுக்களை எடுத்த வீரர்களின் தரவரிசை பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார்.

இதில் 170 விக்கெட்டுகளை கைப்பற்றி மலிங்கா முதலிடத்தை பெற்றுள்ளார். தற்போது மலிங்கா ஓய்வு பெற்று விட்டதால், இந்த நடப்பு தொடரிலேயே அமித் மிஸ்ரா மலிங்காவின் முதலிடத்தை பெற்று விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமித் மிஸ்ராவை அடுத்து ,பிராவோ மற்றும் பியூஸ் சால்வா இருவரும் 156 விக்கெட்டுகளை பெற்று, 3வது மற்றும் 4வது இடத்தை பெற்றுள்ளன. இறுதியாக ஹர்பஜன் சிங் 150 விக்கெட்டுகளை பெற்று 5வது இடத்தில் உள்ளார்.

Categories

Tech |