Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்…. ஒரே இடத்தில் 50 க்கும் மேல் உறுதியானவை…. நெல்லையில் அதிகரிக்கும் தொற்று….!!

நெல்லையில் அமைந்திருக்கும் கூடங்குளம் அணுமின் நிலைய ஊழியர்களில் 70 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது மீண்டும் கொரோனா படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. அந்த வகையில் நெல்லை மாவட்டத்திலும் கொரோனா நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதற்கிடையே நெல்லை மாவட்டம் ராதாபுர தாலுகாவிற்குட்பட்டு கூடங்குளம் அணுமின்னிற்கான நிலையம் அமைந்துள்ளது.

இங்கு ஒப்பந்த தொழிலாளர் உட்பட ஏராளமான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்களுக்கு சுகாதாரத் துறை அதிகாரிகள் தொற்று பரிசோதனை செய்தனர். இதில் சுமார் 70 நபர்களுக்கு தொற்று உறுதியானது. இவர்கள் நாகர்கோவில் மற்றும் கூடங்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Categories

Tech |