இந்தியாவில் கியா கார்னிவல் கார் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது இரண்டாவது புதிய காரான கியா கார்னிவலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த புதிய காரை கொரியாவை சேர்ந்த பிரபல கார் தயாரிப்பு நிறுவனம் சென்னையில் சோதனை செய்து வருகிறது.
கீயாவின் அடுத்த மாடலான கார்னிவல் காரை சோதனை செய்யும் ஸ்பை புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. ஸ்பை படங்களின்படி இந்த புதிய காரின் பின்புறம் ஸ்ப்லிட் லெட் டெயில் லேம்ப்களும் முன்புறம் டிரேட்மார்க் டைகர் நோஸ் கிரில்,ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், ஏர் டேம்கள், ஐஸ் கியூப் LED ஃபாக் லேம்ப்களும் வழங்கப்பட்டுள்ளன.
செல்டோஸ் காரின் தோற்றத்தை கொண்டிருக்கும் இந்த கார்னிவல் காரில் பாதுகாப்பிற்க்காக எட்டு ஏர்பேக், ஏ.பி.எஸ்., இ.பி.டி., எலெக்ட்ராணிக் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், 360-டிகிரி கேமரா, லேன் டிபார்ச்சர் வார்னிங், பிளைன்ட் ஸ்பாட் டிடெக்ஷன், முன்புறம் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார் மற்றும் கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன.