சித்ரா பௌர்ணமி அன்று கிரிவலத்திற்காக யாரும் கோயிலுக்கு வர வேண்டாம் என்று கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலம் வர வேண்டாம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி சித்ரா பௌர்ணமி நடைபெற உள்ளது. தற்போது புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொதுமக்கள் பக்தர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதன் காரணமாக பக்தர்கள் யாரும் கிரி வலத்திற்கு கோவிலுக்கு வர வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.