பீட்ருட் மன அழுத்தத்தைக் குறைக்கும்.இரத்த சோகை உள்ளவர்கள் பீட்ருட் சாப்பிடுவதனால் அதிக அளவு இரத்த செல்கள் உற்பத்தியாகும் .
கருவளையங்களைப் போக்க, பீட்ரூட் ஜூஸை முகத்தில் தடவி ஊற வைத்து, கழுவ கருவளையம் எளிதில் மறையும்.
பீட்ரூட் சாறைத் தீக்காயத்தின் மீது தடவினால், தீப்புண் கொப்புளமாகாமல் விரைவில் ஆறி விடும்.பீட்ரூட் மூலநோயை குணப்படுத்தும் ஆற்றலுடையது .
பீட்ரூட் சாறுடன், படிகாரத்தை பொடியாக்கி, உடலில் எரிச்சல், அரிப்பு உள்ள இடங்களில் தடவினால் எரிச்சல் அரிப்பு மறையும் .தலைமுடி உதிர்தல், பொடுகு போன்ற பிரச்சனைகளை நீக்க தினந்தோறும் பீட்ரூட் ஜூஸ் குடிப்பது நல்லது.
பீட்ரூட்டில் அதிக அளவு இரும்புச்சத்து மற்றும் நன்மை தரும் வேதிப்பொருள், நம் நரம்புகளைத் தளர்த்து நல்லத் தூக்கம் ஏற்பட செய்கிறது.
இரத்தக் கொதிப்பு அதிகமாக உள்ளவர்கள் பீட்ருட் சாப்பிட்டால் இரத்தக்கொதிப்பு அடங்கும் . பீட்ருட் அதிகமாக சாப்பிட்டால் இதய அடைப்பு மற்றும் இதய கோளாரு போன்றவை நீங்கும் .
பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வடர சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.
பீட்ரூட்டை வேக வைத்து அதனுடன் வினிகரை கலந்து சொறி, புண்கள், பொடுகு மேல் தடவி வர அனைத்தும் குணமாகும்.பீட்ரூட்டை பிழிந்து சாறுடன் ,தேன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்.
கழுத்தில் உள்ள கருமை மறைய பீட்ரூட் ஜூஸை கழுத்தில் தடவி , மசாஜ் செய்து, கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வர, கழுத்தில் உள்ள கருமை மறைந்து விடும் .