கேரளாவில் கோட்டயம் மாநிலத்தில் உள்ள பேக்கர் நினைவு பள்ளியில், நடைபெற்று வரும் மாபெரும் தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் திரண்டுள்ளனர்.
கேரள மாநிலத்தில் கொரோனா நோய் பரவலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மக்கள் விழிப்புணர்வுடன் தடுப்பூசி முகாம்களுக்கு தாமாகவே முன்வந்து போட்டுக் கொள்கின்றனர். இதனால் முகாம்களுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அதன் ஒரு பகுதியான கோட்டையம் மாநிலத்தில் உள்ள பேக்கர் நினைவு பள்ளியில், நடைபெற்று வரும் மாபெரும் தடுப்பூசி முகாமில் காலை 6 மணியில் இருந்தே நூற்றுக்கணக்கான பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ள திரண்டு வருகின்றனர். மாநிலத்தில் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக இந்த முகாமில் தினம்தோறும் 1000 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சுகாதார துறையினரால் முகாமில் வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு டோக்கன் வழங்கியபோது, வரிசையில் நிற்காமல், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் முந்தி சென்றுள்ளனர். அதனால் பொதுமக்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.