கடன் தொல்லையால் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள கயர்லாபாத் கிராமத்தில் கொளஞ்சிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் வெல்டிங் வேலை சென்னையில் செய்து வருகின்றார். இவருடைய மனைவி சசிகலாஅதே பகுதியில் உள்ள வக்கீல் அலுவலகத்தில் தட்டச்சராக வேலை செய்து வந்துள்ளார். இவர்களுக்கு அபர்ணா என்ற மகளும், தினேஷ் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் சசிகலா ஒரு பெண்ணிடம் கடன் வாங்கியுள்ளார். அந்தக் கடனை கேட்டு சசிகலா வீட்டிற்கு அந்தப் பெண்ணும் அவரது மகனும் வந்துள்ளனர். இதனையடுத்து சசிகலா உங்கள் பணத்தை பிறகு தருகிறேன் இப்போது என்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். ஆனால் அந்தக் கடன் கொடுத்த பெண்ணும் அவரது மகனும் எங்களுக்கு இப்பொழுதே பணம் வேண்டும் என்று சசிகலாவின் வீட்டு வாசலிலேயே அமர்ந்து இருக்கிறார்கள்.
அதன் பிறகு சிறிது நேரம் கழித்து அவர்கள் சென்றுவிட்டனர். இதனால் மிகுந்த மனவருத்தத்தில் இருந்த சசிகலா வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப் பார்த்த குழந்தைகள் கதறி அழுததால் குழந்தைகளின் அழுகுரலைக் கேட்டு அருகிலுள்ள இருந்தவர்கள் விரைந்து சென்று பார்த்துள்ளனர். அப்போது சசிகலா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தார்கள். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சசிகலாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு கடன் தொல்லையால் தனது இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.