Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

திடீர்னு காணாம போயிடுச்சு..! விசாரணையில் சிக்கிய சிறுவர்… கைது செய்த காவல்துறை..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மோட்டார் சைக்கிளை திருடியது தொடர்பாக 17 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரியக்குடி சீனிவாச நகரில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் முன்பு தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார். அதன்பின் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து அவர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில் காரைக்குடி கணேசபுரத்தில் வசித்து வரும் 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள், விக்னேஷ் (19) ஆகிய 3 பேரும் சேர்ந்து தான் அந்த மோட்டார் சைக்கிளை திருடினர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த 17 வயது சிறுவனிடமிருந்து மோட்டார் சைக்கிளை கைப்பற்றிய காவல்துறையினர் அந்த சிறுவன் மீது வழக்குப்பதிந்து பின் கைது செய்தனர். மோட்டார் சைக்கிளை திருடியது தொடர்பாக மேலும் 2 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |