Categories
லைப் ஸ்டைல்

முதுகு வலி, கை கால் அசதியா…? இந்த கொடி மட்டும் போதும்…. நிவாரணம் கிடைக்கும்…!!!

கடினமான வேலைக்கு செல்பவர்களுக்கும், வயதான முதியவர்களுக்கும் கை கால், முதுகு வலி என்பது எப்பொழுதும் வரக்கூடியது. அதிலும் குறிப்பாக ஆப்ரேஷன் செய்து குழந்தை பெற்ற பெண்களுக்கு முதுகு வலி என்பது அதிகமாக இருக்கும். வயதானவர்களுக்கு மூட்டு தேய்மானம், எலும்பில் தேய்மானம் போன்ற பிரச்சனையால் முதுகுவலி ஏற்படலாம். இந்நிலையில் முதுகுவலி கைகால் அசதி குணமாக பல்வேறு மருத்துவ முறைகள் இருக்கின்றன. ஆனால் சீந்தல் செடி அதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

சீந்தல் செடியின் முதிர்ந்த கொடிகளை உலர்த்திப் பொடியாக்கி காலை மாலை அரை ஸ்பூன் பாலுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். மேலும் இந்த பொடியை பனங்கற்கண்டுடன் சேர்த்து சாப்பிட்டால் உடல் வலி, முதுகு வலி குணமாகும். சர்க்கரை நோயால் ஏற்படும் கை கால் அசதி, உடல் மெலிவு, அதிக தாகம் எடுத்தல் போன்றவை சரியாகும்.

Categories

Tech |