சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மேலாயூர் கிராமத்தில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய குடும்பத்தினருக்கும், அதே பகுதியில் வசித்து வரும் பெரியசாமி என்பவரது குடும்பத்தினருக்கும் இடையே காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் பதிப்பது சம்மந்தமாக தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் இரு தரப்பினரும் மோசமாக மோதிக் கொண்டனர். இதுகுறித்து பெரியசாமி மகன் கண்ணன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் பாலகிருஷ்ணன், அவருடைய மனைவி சாந்தி ஆகிய 2 பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல் பாலகிருஷ்ணனின் மனைவி சாந்தி கொடுத்த புகாரின் பேரில் பெரியசாமி, அவரது மனைவி இருளாயி மற்றும் மகன் கண்ணன் ஆகிய 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக இருதரப்பினரை சேர்ந்த 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.