இருசக்கர வாகனங்களில் வேகக் கட்டுப்பாடு கருவிகளை பொறுத்த உற்பத்தி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தும் படி மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .
கடந்த 2013ஆம் ஆண்டு பெண் பல் மருத்துவர் ஒருவர், விபத்துக்குள்ளான வழக்கில் 18லட்சத்து 43ஆயிரம் ரூபாயை இழப்பீடாக மோட்டர் வாகன தீர்ப்பாயம் நிர்ணயம் செய்திருந்தது. இதனை அடுத்து குறைவான தொகைய நிர்ணயிக்கப்பட்டதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன்- அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு, இழப்பீட்டை ஒன்றரை கோடியாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டனர்.
அந்த தொகையை 2013ஆம் ஆண்டில் இருந்து ஏழு சதவீத வட்டியுடன் 12 வாரத்திற்குள் செலுத்த வேண்டும் எனவும் ஆணையிடனர். மேலும், விபத்துகளில் உயிர் இழப்பு அதிகரிப்பதற்கு அதிவேகத்தில் வாகனங்களை இயக்குவது தான் காரணம் என குறிப்பிட்ட நீதிபதிகள், இருசக்கர வாகனங்கள் தயாரிக்கும் போதே… வேகக் கட்டுப்பாடு கருவிகளை பொறுத்த உற்பத்தி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தும் படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் இரண்டாம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.