Categories
அரசியல் மாநில செய்திகள்

மே 2ஆம் தேதி கண்டிப்பாக….. தேர்தல் அதிகாரி உறுதி….. எகிறும் எதிர்பார்ப்புகள் …!!

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குஎண்ணிக்கை மே இரண்டாம் தேதி திட்டமிட்டப்படி நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

வாக்கு எண்ணிக்கையின் போது மேற்கொள்ளவேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். கொரோனா பரவல் தீவிரமடைந்திருப்பதை அடுத்து மே 2ஆம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கை நடத்துவது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு காணொளி காட்சி மூலமாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் முடிவில் மே 2ஆம் தேதி திட்டமிட்டப்படி கொரோனா கட்டுப்பாடுகளுடன் வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்டத்தின் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி காணொளி காட்சி மூலம் ஆலோசித்தார். இதில் வாக்கு எண்ணிக்கையின் போது மேற்கொள்ளவேண்டிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மேசைகள் அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இதனால் மே 2ஆம் தேதி வெளியாக இருக்கும் தேர்தல் முடிவுகளின் மீது எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Categories

Tech |