Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதை மீறினால் கடும் நடவடிக்கை எடுங்க… ஆய்வுக் கூட்டத்தில்… மாவட்ட ஆட்சியர் அறிவுரை..!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா அலுவலகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவது குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் திருநாவுக்கரசு தலைமையில் கொரோனா பரவலை தடுப்பது குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அந்த ஆய்வுக் கூட்டமானது பேரூராட்சி செயல் அலுவலர் ஜான் முகமது, அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் நபிஷா பானு, சிங்கம்புணரி வணிகர் நல சங்க தலைவர் வாசு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு கடைபிடிப்பது மற்றும் ஊரடங்கு நேரத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறி நடப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இந்த ஆய்வு கூட்டத்தில் சுகாதார ஆய்வாளர்கள் மதியரசு, தினகரன், பிரான்மலை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் செந்தில் குமார் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

Categories

Tech |