ரஷ்யாவில் இளைஞர் ஒருவர் மிக உயரமான கட்டடத்தின் உச்சியில் சிமென்ட் கட்டைகளில் சர்வ சாதாரணமாக துள்ளிக் குதித்து ஓடும் சாகச வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உலகில் வாழும் பலர் நாம் ஏதாவது ஒரு சாதனைகள் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் ஏதாவது சாகச வீடியோவை வெளியிட்டு அசத்தி வருகின்றனர். ஆனால் ஒரு சிலர் உயிரை பணயம் வைக்கும் விதமாக சர்வ சாதாரணமாக சாதனைகளை அரங்கேற்றி வருகின்றனர். அந்த வகையில்,ரஷ்யாவின் காடரின்பர்க் (Yekaterinburg) என்ற பகுதியில் வசித்து வரும் ஷெர்ஙஸ்டையாசென்கோ (Sherstyachenko) என்ற 28 வயது இளைஞர் உயிரைப் பணயம் வைத்து சாகசம் செய்வதில் அதிக விருப்பம் கொண்டவர். உலகில் ஒரு சிலர் மட்டுமே இப்படி உயிரை பணயம் வைத்து சாகசம் செய்வார்கள்.
அதேபோல் இந்த இளைஞர் கடந்த சில நாட்களுக்கு முன் தனது நகரில் இருக்கும் பலநூறு அடி அளவிற்கு உயரமான கட்டடத்திற்குச் சென்று, அங்கு அமைக்கப்பட்டிருந்த சிமெண்ட் கட்டைகளில் ஒவொன்றாக குதித்து குதித்து ஓடினார். இந்த சாதனையை ட்ரோன் மற்றும் செல்ஃபி ஸ்டிக் கொண்ட செல்போன் உதவியுடன் தானாகவே அவர் படம் பிடித்துள்ளார். இந்த காட்சியை பார்க்கும் அனைவருக்கும் திக் திக் என்று இருக்கும். ஆனால் இவர் சர்வ சாதாரணமாக இது போன்ற சாதனைகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.