கடையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த டயருக்கு இடையில் இருந்த பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்து விட்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள மோர்ஸ் கார்டன் பகுதியில் டயர் கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்த கடையில் அடுக்கி வைக்கப்பட்ட டயர்களுக்கு இடையே பாம்பு ஒன்று இருந்துள்ளது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த கடை ஊழியர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 4 அடி நீளம் கொண்ட கட்டு விரியன் பாம்பை பிடித்து விட்டனர். அதன்பின் தீயணைப்புத் துறையினர் அந்த கட்டு விரியன் பாம்பை அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விட்டனர்.