Categories
பல்சுவை மாநில செய்திகள்

புதிய உச்சம் தொட்ட தங்கத்தின் விலை….. 7 நாட்களில் ரூ 2008 உயர்வு …..!!

தங்கம் விலை சவரனுக்கு 192 அதிகரித்து 28,568 ரூபாயை எட்டி புதிய உச்சம் தொட்டுள்ளது.

சர்வதேச பொருளாதார மந்தநிலை , இந்திய பொருளாதார சரிவு , இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தது அரசியல் வர்த்தக சூழல் என தொடர்ந்து தங்கத்தின் விலை அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் இன்று ஆபரண தங்கம் சவரனுக்கு 192 அதிகரித்து ஒரு சவரன் 28 ஆயிரத்து 568 விற்பனை செய்யப்படுகிறது.ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் தற்போது வரை சவரனுக்கு 2008 ரூபாய் அதிகரித்துள்ளது. புதிய உச்சம் தொட்டு வரலாறு படைத்துக் கொண்டிருக்கிறது தங்கத்தின் விலை. இது முதலீட்டாளர்களுக்கு மகிழ்சியை கொடுத்தாலும் சாமானியர்களுக்கு மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Categories

Tech |