காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்தின் மூலம் 83 டிஎம்சி நீர் மட்டுமே தமிழகத்திற்கு ஒதுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அனைத்து மாநிலங்களுக்கும் தண்ணீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளும் விதமாக காவேரி-கோதாவரி நதிகளை இணைக்க மத்திய அரசு திட்டமிட்டு அதற்கான விரிவான திட்ட அறிக்கையையும் தயார் செய்துள்ளது. அந்த அறிக்கையின் படி கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டத்தின் மூலம் தமிழகத்திற்கு 83 டிஎம்சி நீர் மட்டுமே ஒதுக்கப்படும் என தேசிய நீர்வள மேம்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல ஆந்திரா தெலுங்கானா மாநிலத்திற்கு 163 டிஎம்சி தண்ணீர் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்திற்கு உரிய நீர் வழங்க வேண்டும் என கடந்த ஜூன் மாதத்தில்முதல்வர் பழனிச்சாமி பிரதமருக்கு கடிதம் எழுதினார். அதில், தமிழகத்திற்கு 183 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டுமென்று அவர் கோரிக்கை வைத்திருந்தார். அவரது கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. இதனை தொடர்ந்து 125 முதல் 150 டிஎம்சி நீர் ஆவது வழங்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் மீண்டும் கோரிக்கைகள் அனுப்ப திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.