இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்குகள் நடைபெறுவதற்கு முன்னதாக மேகன் மெர்க்கல், மகன் ஆரிச்சியுடன் இணைந்து ராணியாரிடம் பேசியதாக அரண்மனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
தாத்தாவின் இறுதிச்சடங்குகளில் கலந்து கொள்வதற்காக பிரித்தானியா வந்திருந்த இளவரசர் ஹரியை, மேகன் மெர்க்கல் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மேலும் இளவரசர் ஹரியை பொருத்த வகையில் பிரித்தானியாவிற்கு பயணம் செய்வது என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும் சூழ்நிலையில், மேகன் மெர்க்கல் தொடர்ந்து இளவரசன் ஹரியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது. மேலும் பிரித்தானியாவில் ஒன்பது நாட்கள் தங்கியிருந்த இளவரசர் ஹரி, லண்டனிலிருந்து கலிபோர்னியாவிற்கு நேற்று தான் திரும்பி சென்றுள்ளார்.
இந்நிலையில் இளவரசர் ஹரி பிரித்தானியாவில் தங்கியிருந்த அந்த 9 நாட்களில் தந்தை சார்லஸ் மற்றும் சகோதரர் வில்லியமுடன் ஒரே ஒரு முறை மட்டுமே தனிப்பட்ட முறையில் பேசியதாக கூறப்படுகிறது. மேலும் பிரித்தானியாவில் தங்கியிருந்த அந்த ஒன்பது நாட்களும் நிறைமாத கர்ப்பிணியான, மேகன் மெர்க்கல் தனது கணவரை தொடர்ந்து தொடர்புகொண்டு பேசியதாக தெரிகிறது. மேலும் இளவரசர் ஹரி தனது மனைவி மேகன் மெர்க்கல் மற்றும் மகன் ஆர்ச்சி ஆகிய இருவரையும் தனியாக விட்டு வர விருப்பமில்லாமல் பிரித்தானியாவிற்கு வந்ததால் அவர்கள் இருவருடைய நலன் குறித்தும் இளவரசர் ஹரிக்கு தெரியப்படுத்துவதற்காக மேகன் மெர்க்கல் தினமும் இளவரசர் ஹரியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
மேலும் அமெரிக்காவில் குடியிருக்க தொடங்கிய நாள் முதலே ஹரி-மேகன் தம்பதியினர், இளவரசர் பிலிப் மற்றும் ராணியை நேரலையில் தொடர்புகொண்டு பேசி வந்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக இளவரசர் பிலிப் ஏப்ரல் 9-ஆம் தேதி காலமானதையடுத்து, மனக்கசப்பில் இருந்த சொந்தங்கள் ஒன்று சேர ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது என்றும் தெரிகிறது. இதனையடுத்து தற்போது அமெரிக்காவிற்கு திரும்பிய இளவரசர் ஹரி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 10 நாட்கள் கட்டாய தனிமையில் உள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.