பலத்த மழையின் காரணமாக மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நள்ளிரவு நேரத்தில் பலத்த மழை பெய்து உள்ளது. இந்த மழையினால் வனப் பகுதியில் இருக்கும் காய்ந்த புற்கள், செடிகள் பசுமையான நிலைக்கு திரும்பி வர ஆரம்பித்துள்ளன.
இந்நிலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்ததால் கேத்தியில் இருந்து சேலாஸ் செல்லும் சாலையில் திடீரென மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதன்பின் பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு சாலையில் இருந்த மண்ணை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.