Categories
தேசிய செய்திகள்

அடுத்த மூன்று வாரம் ஜாக்கிரதை… உச்சம் தொடும் கொரோனா 2ஆம் அலை… மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை…

அடுத்த 3 வாரத்திற்கு கொரோனா தொற்று 2ஆம் அலை உச்சம் தொடும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றின் 2ஆம் அலை இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மிக வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக இந்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 7 யூனியன் பிரதேச மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் காவல்துறை டிஜிபி ஆகியோருடன் இந்திய அரசு அதிகாரிகள் ஆய்வு நடத்தியுள்ளனர். மேலும் இதில்  இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் டைரக்டர் ஜெனரல் பல்ராம் பார்கவா, இந்திய உள்விவகாரத்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா மற்றும் மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூ‌ஷன் மற்றும் நிதி அயோக், உறுப்பினர் வி.கே.பால் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

அதில் 7 யூனியன் பிரதேசங்களின் தற்போதைய நிலைமை என்னவென்று கேட்டு அறிந்துள்ளனர். இதனைஅடுத்து அனைத்து மாநிலங்களிலும் அடுத்த 3 வாரத்திற்கு நோய் பரவல் இன்னும் அதிகமாக இருக்கும் என்றும், இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளில் தேவையான படுக்கை வசதிகளை தயாராக வைத்திருக்க வேண்டும் என்றும் கூறினார்கள். மேலும் இந்த மிக மோசமான சூழலை எதிர்கொள்ளும் அளவிற்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து டெல்லி, சண்டிகர், லடாக், காஷ்மீர் போன்ற பகுதிகளில் கொரோனா தொற்று மிக மோசமான நிலையில் இருக்கிறது. அங்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. எனவே அடுத்த 3 வாரத்திற்கு கொரோனா அதிகரிக்கும் நிலையில் மத்திய மாநில அரசுகள் அலட்சியமாக இருக்க கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |