Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

முன்னாடியே கடன் வாங்கிட்டோம்….. கொடுமை செய்த மேஸ்திரி….. கொத்தடிமைகளை மீட்ட காவல் துறையினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கரும்பு தோட்டத்தில் கொத்தடிமையாக வேலை செய்த 7 பேரை காவல் துறையினர் மீட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பகட்டுவான்பட்டி கிராமத்தில் கரும்பு தோட்டம் அமைந்துள்ளது. அந்த தோட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் அவரது மனைவி மேலும் எல்லப்பன் மற்றும் அவரது மனைவி அவர்களது குழந்தைகள் 3 பேர் என மொத்தம் 7 பேர் கொத்தடிமைகளாக தோட்டத்தில் வேலை செய்து வந்துள்ளனர்.

இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் அவர்களை மீட்டு விசாரணை செய்த போது சுரேஷ் மற்றும் எல்லப்பன் ஆகியோர் தலா 30 ஆயிரம் முன் பணம் வாங்கிக் கொண்டு தோட்டத்தில் வேலை செய்து வருவதாகவும் தினசரி கூலி தராமல் கொடுமைப்படுத்தி வந்ததும் தெரியவந்ததுள்ளது. மேலும் அவர்களை கொத்தடிமையாக வேலை வாங்கிய மேஸ்திரி மற்றும் தோட்டத்தின் உரிமையாளர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |