Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

போலீஸ்காரருக்கே பாதுகாப்பு இல்லையா…. கும்பலாக சேர்ந்து தாக்கிய வாலிபர்கள்… மேலும் ஒருவர் கைது…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் போலீஸ்காரரை தாக்கிய வழக்கில் மேலும் ஒருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் ராமராஜன். இந்நிலையில் அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கு வழக்கு தொடர்பாக சம்மன் கொடுப்பதற்கு ராமராஜன் சென்றுள்ளார். அப்போது ராமராஜனை அப்பகுதியிலுள்ள சிலர் தாக்கியுள்ளனர்.

இதுக்குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை செய்த போது அப்பகுதியை சேர்ந்த அப்துல் கலந்தர் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த மைதீன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |