நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்து வருகிறது. இதனால் பல உயிரிழப்புகளும், பாதிப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா அதிகரித்து வருவதால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் கொரோனா நடவடிக்கைகளை கட்டாயம் கடைபிடிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தலைமைச் செயலக பணியாளர்கள், ஊழியர்கள், பார்வையாளர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தலைமைச் செயலக ஊழியர்கள், பார்வையாளர்கள் முகக்கவசம் அணியாவிட்டால் ரூபாய் 200, பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூபாய் 500, சமூக இடைவெளியை கடைபிடிகைவிட்டால் ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும். விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.