Categories
உலக செய்திகள்

கொரோனாவுக்கு நாய்கள் தடுப்பூசி… மக்கள் உயிருடன் தான் விளையாடுவதா…? அதிர்ச்சியடைந்த சுகாதாரதுறை அதிகாரிகள்…!!!

கொரோனாவிலிருந்து பாதுக்காக்க  75 நபர்கள் நாய்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென் அமெரிக்காவில் சிலிகா லாமா என்ற நகரில் அமைந்துள்ள ஒரு கால்நடை மருத்துவமனையில் பணிபுரியும் María Fernanda Muñoz என்ற மருத்துவர் கொரோனாவில் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள நாய்களுக்கான தடுப்பூசியை 8 டோஸ்கள் எடுத்துக் கொண்டதாக அந்நாட்டு சுகாதார துறை அமைச்சகத்துக்கு தகவல்கள் கிடைத்துள்ளது. இதுகுறித்து விசாரித்த சுகாதாரத்துறை அதிகாரிகள் இந்த வழக்கை விசாரணைக்கு கொண்டு வந்துள்ளனர்.

இதனையடுத்து அந்த மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்களிடம் கேட்டபோது மருத்துவர் மட்டுமல்லாது அந்தப் பகுதியில் வசிக்கும் 75க்கும் நபர்களுக்கு நாய்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் இந்த செயல் மக்களின் உயிருடன் விளையாடுவது என்றும் இந்த தடுப்பூசி மிகவும் ஆபத்தானது என்றும் கூறியுள்ளார்.

Categories

Tech |