பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கும் திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. 800 கோடி ரூபாய் செலவில் உருவாகும் இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லட்சுமி, லால் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வரும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தடை பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட கொரோனாவின் தாக்கம் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.
இதை தொடர்ந்து 9 மாதங்கள் கழித்து கடந்த ஜனவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஐதராபாத்தில் தொடங்கியது. 50 நாட்கள் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் முடிந்துள்ளது. இந்நிலையில், தற்போது தமிழகம் முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக வீசி வருவதால் இப்படத்தின் படப்பிடிப்பை ஜூன் மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளனர்.