Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“எனக்கு வாழவே பிடிக்கல” வாலிபர் எடுத்த விபரீத முடிவு… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

மனநலம் பாதிக்கப்பட்டு பின் குணமாகி வேலைக்கு சென்ற வாலிபர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காயல்பட்டினம் பகுதியில் நேபாளம் நாட்டை சேர்ந்த ராம் பகதூர் ஆசாத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூர்க்கா வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி, இரண்டு மகள்கள் மற்றும் 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் இவரின் இளைய மகனான முருகன் என்பவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளது. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை அளித்துள்ளனர். அதன் பின் குணமடைந்த முருகன் பெங்களூருவில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தனது குடும்பத்தினரை பார்க்க காயல்பட்டினத்திற்கு வந்த முருகன் மிகவும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இதனை பார்த்ததும் அவரது தங்கை துர்கா ஈஸ்வரி என்பவர் தனது சகோதரனிடம் விசாரித்தபோது, அவர் தனக்கு வாழ பிடிக்கவில்லை என்று கூறியிருக்கிறார். இதனை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த துர்கா அவரை சமாதானப்படுத்தி உள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயம் இதில் முருகன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ஆறுமுகநேரி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு அரசு மருத்துமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |