Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை மனிஷா யாதவ்விற்கு கொரோனா…. தனிமை படுத்திக்கொண்டதாக தகவல்….!!!

நடிகை மனிஷா யாதவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் வெளியான ஆதலால் காதல் செய்வீர், திரிஷா இல்லனா நயன்தாரா, வழக்கு எண் 18/9 உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் மனிஷா யாதவ். மேலும் இவர் சென்னை 600028 என்ற திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சொப்பன சுந்தரி எனும் பாடலுக்கும் நடனமாடி உள்ளார். இதையடுத்து கடந்த 2014ஆம் ஆண்டு மனிஷா யாதவ் தனது காதலரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், நடிகை மனிஷா யாதவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கண்டறியப்பட்டதும் நான் என்னைத் தனிமைப் படுத்திக் கொண்டேன்.

கூடிய விரைவில் குணமாகிவிடும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன். சில நேரங்களில் மூச்சு திணறல் ஏற்படுகிறது. வேறு எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. நீங்கள் அனைவரும் வீட்டிலேயே இருங்கள். வெளியே சென்றால் கட்டாயம் மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தி உள்ளார்.

Categories

Tech |