Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இவங்க எப்படி இங்க வந்தாங்க…. மாட்டு வண்டிகள் பறிமுதல்…. வலை வீசி தேடும் போலீசார்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆற்றில் மணல் அள்ளிக்கொண்டிருந்தவர்கள் அதிகாரிகளை பார்த்ததும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள காட்டுக்குடி தெற்கு வெள்ளாற்றில் திருட்டுத்தனமாக மணல் அள்ளுவதாக மணமேல்குடி தாசில்தார் ஜமுனாவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதுக்குறித்து தகவலறிந்த தாசில்தார் ஜமுனா, வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் ஒன்று சேர்ந்து அப்பகுதிக்கு விரைந்து சென்றுள்ளனர்.

இந்நிலையில் அதிகாரிகளை பார்த்தும் மணல் அள்ளிக் கொண்டிருந்தவர்கள் மாட்டு வண்டிகளை விட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து  5 மாட்டு வண்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். மேலும் மணல் திருடியவர்களை காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |