Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வேகமாக பெருக்கெடுக்கும் 2 ஆவது அலை…. ஒரேநாளில் உறுதியானவை…. நெல்லையில் கிருமிநாசினி தெளிப்பு….!!

நெல்லையில் ஒரே நாளன்று காவல்துறை அதிகாரி உட்பட 426 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது கொரோனா மீண்டும் படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை எடுத்து வருவதோடு மட்டுமல்லாமல் சில கட்டுப்பாடுகளையும் அமலுக்கு கொண்டு வந்தது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்திலும் கடந்த ஒரு வாரமாகவே தொற்றின் பரவல் அதிகமாக இருக்கிறது.

இதற்கிடையே ஒரே நாளில் காவல்துறை அதிகாரி உட்பட 426 நபர்களுக்கு புதிதாக தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் இவர்கள் பணிபுரிந்த இடங்களில் கிருமி நாசினி தெளிக்கபட்டுள்ளது. இதனையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனைத் தொடர்ந்து தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,327 ஆக உயர்ந்துள்ளது.

Categories

Tech |