கனடாவில் உணவு விடுதியில் வைத்து இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனடா வான்கூவரில் உள்ள உணவு விடுதியின் வாசலில் சுட்டுக் கொல்லப்பட்ட நபர் குறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் இருபதாம் தேதி சனிக்கிழமை இரவு 8 மணி அளவில் ஹர்பிரீத் சிங் தலிவால் (31) என்ற இளைஞர் நின்று கொண்டிருந்தார் .
அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை குறிவைத்து சுட்டுக் கொன்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில் இந்தச் சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும் வான்கூவரில் இந்த ஆண்டுகளில் மட்டும் 5 கொலை நடந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.