நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் டெல்லியில் கொரோனாவால் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு, உடை, குடிநீர், மருந்து, இருப்பிடம் ஆகியவற்றுடன் மாத உதவித் தொகையாக ரூபாய் 5000 வழங்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது. இவற்றைக் கண்காணிக்க டெல்லி உள்துறை முதன்மைச் செயலாளர் புபேந்தர் சிங் தலைமையில் அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல்-20 முதல் டெல்லி அரசு உதவிகளை செய்யத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.