Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இயற்கையின் இராணின்னு சொல்லக்கூடிய கொய்யாப்பழத்தில்… இவ்ளோ நன்மைகளா ?அப்போ… இத இனி வேஸ்ட் பண்ணாதீங்க..!!

நம் உடலுக்கு மிக முக்கியமாக தேவைப்படும் வைட்டமின் C சத்துக்கள் நிறைந்த இந்த கொய்யாப்பழத்தை சாப்பிடுவதால் உடம்பிற்கு கிடைக்கும் நன்மைகளை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:

இந்த கொய்யாப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருவதால், இது இதயத்திற்கு அதிக பலம் அளிக்கக்கூடிய ஒரு இயற்கையின் இராணி அப்படின்னு கூட சொல்லலாம்.

வெள்ளை, சிவப்பு மற்றும் சற்று நீண்ட வகை கொய்யா பழங்கள் உள்ளன. அனைத்து வகைகளிலும் ஒரே வகையான சத்துக்களே அடங்கியுள்ளன. இது காய் பருவத்தில் பச்சை நிறத்திலும் நன்கு பழுத்த நிலையில் மஞ்சள் நிறத்திலும் காணப்படும். இப்பழத்தில் பல வைட்டமின்களும் தாதுக்களும் நிறைந்து காணப்படுகின்றன.

நெல்லிக்கனிக்கு அடுத்து அதிக வைட்டமின் சி இப்பழத்தில் உள்ளது. இதனால் இப்படத்தை வைட்டமின்-சி யின் இராணி என்பர்.  மேலும் இந்த பழத்தில் புரதம் கொழுப்பு, தாது உப்பு,  மாவுச் சத்து, சுண்ணாம்புச்சத்து, இரும்புச் சத்து, அமிலச்சத்து நிறைந்துள்ளது. வைட்டமின் சி அதிகம் கொண்ட கொய்யாப்பழம் இரத்தத்தை விருத்தி செய்வதிலும், சுத்திகரிப்பதிலும் முக்கியப் பங்காற்றுகிறது.

இதயத்தைப் பலப்படுத்தும் என்பதால் இதய நோயாளிகள் தினமும் ஒரு கொய்யாப் பழத்தை உண்டு வரலாம். ஜீரண சக்தியை அதிகரிக்கும். இரத்தசோகை உடையவர்கள் தொடர்ந்து உண்டு வந்தால் இரத்தம் உற்பத்தியாகும். சுண்ணாம்புச் சத்து அதிகம் உள்ளதால் எலும்புகளுக்கு நல்லது.பசி மந்தம் நீங்கும்.

குழந்தைகளுக்கு நல்ல பசியை உண்டாக்கும். ஆனால் 3 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே கொய்யாப்பழத்தை உணவாக கொடுக்க வேண்டும். மேலும் இந்த பழத்தை சாப்பிடுவதால் வயிற்றில் உள்ள  புண்ணுக்கு ஒரு சிறந்த பழமாகவும்,  குடல் சம்பந்தமான நோய்களை கூட இந்த பழம் குணப்படுத்தும்.

Categories

Tech |