Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

தோசை மற்றும் இட்லிக்கான ஒரு புது வகையான  கோஸ் சட்னி!!!

தோசை மற்றும் இட்லி க்கான ஒரு புதிய வகையான  கோஸ் சட்னி செய்யலாம் வாங்க .

தேவையான பொருட்கள்:

நறுக்கிய கோஸ் – ஒரு கப்

பச்சை மிளகாய் – 2

இஞ்சி – ஒரு சிறு துண்டு

உளுத்தம் பருப்பு – 1  டீஸ்பூன்

புளி  –சிறிதளவு

உப்பு – தேவைகேற்ப

எண்ணெய் –தேவைகேற்ப

கடுகு – 1/4 டீஸ்பூன்

உடைத்த உளுத்தம் பருப்பு – 1/4  டீஸ்பூன்

கறிவேப்பில்லை – சிறிதளவு

cabbage க்கான பட முடிவு

செய்முறை:

ஒரு கடாயில் எண்ணெய்  ஊற்றி காய்ந்ததும், உளுத்தம் பருப்பு, கோஸ் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு  வதக்கி எடுத்து கொள்ள வேண்டும்.பின் அதனுடன் புளி , உப்பு, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து சட்னி பதத்திற்கு அரைத்து கொள்ள வேண்டும்.கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உடைத்த உளுத்தம் பருப்பு, கறிவேப்பில்லை   போட்டு  தாளித்து அதில் கொட்டி பரிமாறினால் அருமையான கோஸ் சட்னி தயார் !!!

Categories

Tech |