வீட்டில் இருந்து பணி செய்யாமல் அலுவலகங்களுக்கு வரும் பணியாளர்களுக்கு இலவசமாக கொரோனா பரிசோதனை கிட்களை வழங்க வேண்டும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
ஜெர்மனியில் வீட்டிலிருந்து பணி செய்யாமல் அலுவலகங்களுக்கு வரும் பணியாளர்களுக்கு அந்த நிறுவனமே கொரோனா பரிசோதனை கிட்களை இலவசமாக வழங்க வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த கிட்களை பயன்படுத்தி வாரத்துக்கு ஒருமுறையாவது கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் இதனை பயன்படுத்துவதற்கு பணியாளர்களுக்கு முழு சுதந்திரம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
மேலும் பனி நிறுவனங்களே இந்த கிட்டுகளுக்கான செலவை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவ்வாறு நிறுவனங்களுக்கு வரும் பணியாளர்களுக்கு அடிப்படை சுகாதார வசதிகளை செய்து தராமல் இருப்பதும் ஒழுங்காக பரிசோதனைகள் செய்யாமல் இருப்பதும் தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.