நாமக்கல் மாவட்டத்தில் கோழி ஏற்றிக்கொண்டு சென்ற லாரி சாலையிலுள்ள சாக்கடையில் விழுந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்திலுள்ள மணப்பள்ளி பகுதியிலிருந்து லாரி ஒன்று கோழியை ஏற்றிக் கொண்டு மோகனூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையிலுள்ள சாக்கடை கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் வந்த டிரைவர் உட்பட அனைவரும் காயமின்றி உயிர் தப்பியுள்ளனர்.
இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான லாரியை கிரேன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தியுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.