Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

காலையில… வெறும் வயிற்றில மட்டும் இத குடிங்க… உடம்புல நடக்குற மாற்றத்தை நீங்களே பாருங்க..!!

தண்ணீரை வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன என்பதை பற்றி நாம் இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: 

அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளில் முதன்மையானது குடல் சுத்தமாகும்.  தண்ணீர் குடித்தவுடன் சிறிது நேரத்திலேயே மலம் கழிக்கக் கூடும். இப்படி தினமும் தவறாமல் உடலில் உள்ள கழிவுகளை முற்றிலும் வெளியேற்றிவிடும். தண்ணீரானது உடலின் மூலை முடுக்குகளில் தங்கியுள்ள நச்சுக்களை சிறுநீர் மூலமாக வெளியேற்றிவிடும்.

தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்கள் வெளியேறி விரைவில் பசி எடுக்க ஆரம்பித்துவிடும். இரத்த செல்கள் உற்பத்தியாகும்.  வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் வளர்ச்சியானது அதிகரித்துஇரத்தமானது அதிகப்படியான ஆக்ஸிஜனை கொண்டிருப்பதால் உடலானது நல்ல எனர்ஜியுடன் இருக்கும்.

அடுத்ததாக பெரும்பாலானோருக்கு உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பதால் தலைவலி அதிகமாக ஏற்படும் அத்தகையவர்கள் தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால் உடலின் நீர்ச்சத்தானது அதிகரித்து தலைவலி குறையும். சிலரைப் பார்க்கும் பொழுது காலை உணவு உண்ண கூட நேரம் இருக்காமல் அவசர அவசரமாக அலுவலகம் செல்வார்கள்.

அதுமாதிரி உள்ளவர்கள் தினமும் அதிகாலையில்  தண்ணீர் குடித்து வந்தால் அல்சர் ஏற்படாமல் தடுக்கலாம்.  அடுத்து முக்கியமாக நிறைய பேருக்கு உள்ள பெரிய பிரச்சனை  என்னென்ன  எடையை குறைக்க நினைப்பவர்கள் அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வாருங்கள். உடலில் தங்கியுள்ள நச்சுக்களுடன்  உடலின் மெட்டபாலிசம் அதிகரிப்பதால் தேவையற்ற கொழுப்புக்களும் கரைந்து வெளியேறி உடல் எடை குறைய உதவியாக இருக்கும்.

குடலானது சுத்தமாக இல்லாவிட்டால் முகத்தில் பருக்கள் வர ஆரம்பித்துவிடும்.  இப்படி வந்தால் சருமமானது அழகை இழந்துவிடும்.  எனவே தினமும் தண்ணீரைக் குடித்து வந்தால் உடல் நலம் சீராக நடைபெற்று முகம் வந்து பருக்களின்றி பொலிவுடன் அழகாகக் காணப்படும் அதனால் காலையில் எழுந்தவுடன் காபி குடிக்காமல் தண்ணீர் குடித்து பிறகு, ஒரு மணி நேரம் கழித்து எது வேண்டுமானாலும் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

Categories

Tech |