ஏப்ரல் 26 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகின்றது. இதன் காரணமாக மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் ஏப்ரல் 26ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது.
சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, தென்காசி, நெல்லை, குமாரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.