நீதிமன்றம் இடித்து சொல்லும் நிலைமை பெருமை அல்ல என்று கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதனை கட்டுக்குள் கொண்டு வதற்கு தமிழக அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது தடுப்பூசிகளின் விலை திடீரென்று உயர்வைக் கண்டுள்ளது. இதற்கு பல கட்சியினரும், மருத்துவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் அலட்சிய கிருமி தாக்குதலாலும் இந்தியா அல்லாடி கொண்டிருக்கின்றது. மத்திய அரசின் நிலைப்பாட்டால் தடுப்பூசிகளின் விலை திடுமென உயர்ந்திருக்கிறது. மக்களை காப்பது அரசின் பொறுப்பு என நீதிமன்றம் இடித்துசொல்லும் நிலமை பெருமைக்குரியது அல்ல என்று ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.