2000 மதிப்புள்ள புகையிலை, குட்கா போன்ற பொருட்களை நகராட்சி ஆணையர் சுபாஷினி பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டுகொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த ஆண்டு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் இருந்து படிப்படியாக சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடு படுத்தப்பட்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறுபவர்களின் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றது. மேலும் இதை கட்டுப்படுத்த தமிழக அரசு மீண்டும் வாரம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு பல அதிகாரிகள் நேரில் சென்று கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர். இதனையடுத்து நகராட்சி ஆணையாளர் சுபாஷினி கொரோனா தடுப்பு விதிகளை முறையாக பொதுமக்கள் பின்பற்றுகிறார்களா என்றும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா, பிளாஸ்டிக் பைகள் போன்ற பொருட்கள் கடைகளில் வைத்து விற்பனை செய்யப்படுகிறதா என்று திடீரென ஆய்வு மேற்கொண்டுள்ளார். அந்த ஆய்வில் ஜெயங்கொண்டம் ,விருத்தாசலம், சிதம்பரம் போன்ற இடங்களில் உள்ள டீ கடைகள், மளிகை கடைகள், பெட்டிக்கடைகள் போன்ற கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை கண்டுபிடித்து பறிமுதல் செய்துள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் அந்தக் கடைக்காரரிடம் மீண்டும் இது போன்ற பொருட்களை விற்பனை செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் நகராட்சி ஆணையர் சுபாஷினி அவ்வழியாக வந்த வாகன ஓட்டுனர்கள், பேருந்து டிரைவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கொரோனா பாதிப்பை குறித்தும் முக கவசம் அணிவதை குறித்தும் அறிவுரை வழங்கியுள்ளார். அப்போது அவ்வழியாக அரசு பேருந்து ஒன்று சென்ற போது அந்தப் பேருந்தின் டிரைவர் முகக் கவசம் அணியாமல் இருந்ததைப் பார்த்த உடனே சுபாஷினி அந்த பேருந்தில் ஏறி அவரிடம் முகக்கவசம் அணியபடி கூறிவிட்டு சக பயணிகளிடம் முக கவசம் அணிய வேண்டும் என்றும் பேருந்தில் கிருமிநாசினிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.