Categories
தேசிய செய்திகள்

பாகிஸ்தானில் இருந்து பறந்து வந்த புறா…. காலில் இருந்த துண்டு சீட்டு…. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்….!!

பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இருந்து இந்தியாவுக்குள் வந்த புறாவின் காலில் துண்டுச்சீட்டு இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் அம்ரிட்சர் அருகே உள்ள பாகிஸ்தானில் எல்லையிலிருந்து பறந்து வந்த புறா ஒன்று பாதுகாப்பு பபணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புபடை அதிகாரி தோளின் மீது அமர்ந்தது. அப்போது அந்த வீரர் புறாவை தூக்கி பார்க்கும் போது அதன் காலில் துண்டு சீட்டு இருப்பதை பார்த்துள்ளார். பின்னர் அவர் துண்டு சீட்டை எடுத்து பிரித்து பார்க்கும் போது அதில் ஒரு தொலைபேசி எண் எழுதப்பட்டிருந்தது. இதுகுறித்து எல்லை பாதுகாப்பு படையினர் உள்ளூர் காவல்துறையிடம் புகார் தெரிவித்து அந்த புறாவையும் ஒப்படைத்தனர்.

மேலும் புறாக்களுக்கு பயிற்சி அளித்து தீவிரவாத செயல்களில் பயன்படுத்துவது தொடர்பாக அந்தப் புறாவின் மீது சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தனர். இதுகுறித்து காவல்துறை கண்காணிப்பாளர் துருவ் தாஹியா கூறுகையில் புறா ஒரு பறவை என்பதால் அதன் மீது வழக்கு செய்ய முடியுமா என்பது தெரியவில்லை என்றும் பாதுகாப்பு படையினர் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து சட்டத்துறையிடம் கேட்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். மேலும் அந்த புறா காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது என்றும் இதுபோன்ற புறாக்கள் பாகிஸ்தானின் எல்லையில் இருந்து வந்துள்ளது ஆனால் எந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது இல்லை எனவும் கூறினார்.

Categories

Tech |