வாணியம்பாடி நகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் 300 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உலகெங்கிலும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி நகராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நகராட்சி நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் நகராட்சி ஆணையர் அண்ணாமலை, நகர் நல அலுவலர் கணேஷ், சுகாதார ஆய்வாளர்கள் அலி, சத்தியமூர்த்தி, களப்பணி உதவியாளர் சரவணன், சுகாதார மேற்பார்வையாளர் அருள், முன்கள பணியாளர்கள் உட்பட 300 பேருக்கு கொரோனா பரிசோதனைக்காக மருத்துவர் செவிலியர்கள் உதவியோடு சளி மாதிரியை சேகரித்து கொடுத்தனர்.