மிகவும் சுவையான செட்டிநாடு கோவைக்காய் மசாலா செய்யலாம் வாங்க .
தேவையான பொருட்கள்:
நறுக்கிய கோவக்காய் – ஒரு கப்
பூண்டு – 2 பல்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் – சிறிதளவு
கடலை பருப்பு – 3 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 3 டீஸ்பூன்
சீரகம் – 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
எண்ணெய் – தேவையான அளவு
கடுகு – 1/4 டீஸ்பூன்
செய்முறை:
ஒரு கடாயில் , கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்து வறுத்து பொடி செய்து கொள்ளவேண்டும்.பின்னர் , கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, நசுக்கிய பூண்டு, பெருங்காயம் சேர்த்து வதக்கி ,கோவக்காய் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இதனுடன் அரைத்து வைத்திருந்த பொடி சேர்த்து கிளறி 5 நிமிடம் கழித்து இறக்கினால் சுவையான செட்டிநாடு கோவைக்காய் மசாலா தயார் !!!