சாலையில் கிடந்த பணம் மற்றும் விலை உயர்ந்த செல்போனை போலீசிடம் ஒப்படைத்த ஏழை பெண்ணுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
அம்பாசமுத்திரத்தை சேர்ந்த மாரியம்மாள் என்ற பெண் சாலையில் கிடந்த பர்ஸை திறந்து பார்த்ததில் 58,210 ரூபாய் பணம் மற்றும் விலை உயர்ந்த ஆண்ட்ராய்டு செல்போன் இருந்துள்ளது. உடனே அவர் சற்றும் யோசிக்காமல் காவல் நிலையத்திற்கு வந்து பணம் மற்றும் செல்போனை ஒப்படைத்தார். இதனையடுத்து போலீசார்கள் அந்த பொருட்களை உரிமையாளரிடம் சேர்த்தனர் .
இதனால் நேர்மையின் உருவாகத் திகழ்ந்த மாரியம்மாளை பாராட்டி குத்துவிளக்கை பரிசாக போலீசார்கள் வழங்கி கௌரவப்படுத்தினார்கள்.