Categories
மாநில செய்திகள்

மாவட்ட ஆட்சியருக்கு முதல்வர் அதிரடி உத்தரவு…..!!

மாவட்ட ஆட்சியர்கள் அரசின் கண்களாக செயல்பட வேண்டுமென்று மாவட்ட ஆட்சியருக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமை செயலகத்தில் மாவட்ட ஆட்சியாளர்களிடம் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகின்றது. இதில் அரசின் திட்ட பணிகள் குறித்து இரண்டு நாட்கள் விவாதிக்கப்பட்டுகின்றது.  இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியருக்கு தமிழக முதலவர் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதில் , அரசின் திட்டப் பணிகளை கள ஆய்வு செய்து மாதந்தோறும் அறிக்கை அளிக்க வேண்டும். மேலும் மாவட்ட ஆட்சியருடன் இனிமேல்  4 மாதங்களுக்கு ஒரு முறை ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.

Image result for tamil nadu cm District Collector ..... !!

மேலும் , மாவட்ட ஆட்சியர் சுறுசுறுப்பாக களத்தில் இறங்கி வரும் பணியாற்ற வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் அரசின் கண்களாக செயல்படும் பட்சத்தில் அரசு திட்டங்கள் மக்களை உரிய முறையில் சென்றடையும். மழைநீர் சேகரிப்பு , குடிமராத்து , பொது வினியோகம் ,  முதியோர் ஓய்வூதிய திட்டங்களை ஆய்வு செய்ய வேண்டும். மேலும் வீட்டுமனை பட்டா இல்லாதவருக்கு  பட்டா வழங்குதல் வேளாண் திட்டங்களை ஆய்வு செய்யவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.இதில் பொதுப்பணி துறை , போக்குவரத்து , தொழில் வேளாண்மை , கால்நடை பராமரிப்பு , உணவு பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

Categories

Tech |