Categories
மாநில செய்திகள்

சமூகஇடைவெளி இல்லை எனில் ரூ.500 அபராதம்… தமிழக அரசு அதிரடி..!!

தமிழகத்தில் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை என்றால் ரூபாய் 500 அபராதம் வசூலிக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. மேலும் மக்கள் அனைவரையும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கியுள்ளது.

இந்நிலையில் தற்போது சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. முக கவசம் அணியாவிட்டால் ரூபாய் 200 அபராதமும், பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூபாய் 500 அபராதமும் விதிக்கப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |